பெயரை மாற்றிக்கொண்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத்

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது
 பெயரை மாற்றி விட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்

தமிழில் மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், ‘இவன் தந்திரன்’ படத்தில் கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார்

விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து, தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்

ஹெ.ச்.வினோத் இயக்கத்தில் நேர்க்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா, மாறா படத்தின் மூலம் மீண்டும் மாதவனுடன் இணைந்தார்

தற்போது அவர் தனது பெயரை மாற்றியிருப்பதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்

அது குறித்த பதிவில், “என் பெயரைச் சரியாகச் சொல்பவர்களை நான் பாராட்டுகிறேன். உங்கள் கீ போர்டு தாஸ் அல்லது கபூரைப் பரிந்துரைத்தாலும்

உங்கள் உடலின் ஒவ்வொரு இழைகளும் ஸ்ரீநாத் தான் தட்டச்சு செய்ய வேண்டும் என்று கூறுகிறது

அப்படியான நபர்களை நான் பாராட்டுகிறேன். நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள்

இன்ஸ்டாகிராமில் நான் எனது பெயரை ஷ்ரத்தா ரமா ஸ்ரீநாத் என்று மாற்றியுள்ளேன். நான் அதை இங்கேயும் மாற்ற வேண்டும் என நினைக்கிறேன்

ரமா என்பது என் அம்மாவின் பெயர். இனி எல்லா இடங்களிலும் ஷ்ரத்தா ரமா ஸ்ரீநாத் என்று என்னை நான் அறிமுகப்படுத்திக் கொள்வேன்”
என்று தெரிவித்துள்ளார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com