வசூலில் மிரட்டும் ஷாருக்கானின் பதான்.!

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார்.

யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் 50-வது படமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. படத்தின் ட்ரெய்லரின் தமிழ் பதிப்பை நடிகர் விஜய் வெளியிட்டிருந்தார்.

பதான் திரைப்படம் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே உலகம் முழுவதும் கடந்த ஜனவரி 25-ம் தேதி வெளியானது.

4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கானின் படம் வெளியான நிலையில், பதான் திரைப்படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவில் வெளியான 3 நாட்களில் பாக்ஸ் ஆபிசில் 201 கோடி ரூபாய் வசூலித்து பாகுபலி-2 மற்றும் கேஜிஎப்-2 திரைப்படங்களின் சாதனையை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

பதான் திரைப்படம் உலகம் முழுவதும் மூன்றே நாட்களில் 313 கோடி ரூபாய் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

இன்னும் பார்க்க

இன்னும் பார்க்க

இன்னும் பார்க்க

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?