ப்ரியங்கா சோப்ராவின் அழகு ரகசியங்கள்

பிரியங்கா சோப்ரா தனது நடிப்பு திறமை, பிட்னஸ் மூலம் எண்ணற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். 

நடிப்புத் தொழிலுக்கு வருவதற்கு முன்னர் மாடலாக பணியாற்றிய பிரியங்கா குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். 

சோப்ரா தமிழ் மொழித் திரைப்படமான தமிழன் (2002) மூலம் நடிகையாக அறிமுகமானார். 

பிரியங்கா பொதுவாக ஜிமில் வியர்வை சிந்தும் அளவிற்கான உடற்பயிற்சிகளை விரும்புவதில்லை. 

கார்டியோ போன்ற உடலை வலிமையாகும் பயிற்சிகள், ஸ்கிப்பிங், ஸ்பின், யோகா போன்ற பயிற்சிகளை செய்து வருகிறார். 

ஒரு நாள் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் கூட நீண்ட தூரம் நடப்பது, படிகளில் ஏறுவது போன்றவற்றில் கவனம் செலுத்துகிறார். 

ஆரோக்கியமான உணவுகளை மட்டும் சாப்பிட விரும்பும் பிரியங்கா பண்டிகை காலங்களில் விரும்பும் உணவை சாப்பிடுகிறார். 

நீரேற்றமாக இருப்பதில் கவனம் செலுத்தும் பிரியங்கா எப்போதும் தன்னுடன் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்திருப்பார்.

பிரியங்கா அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

News18Tamil.com

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?