பொன்னியின் செல்வன் பட்டு புடவையா?

பொன்னியின் செல்வன் தீமில் நெய்யப்பட்டிருக்கும் பட்டுப்புடவைகள் கவனம் ஈர்த்துள்ளன.

பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ஐஸ்வர்ய லக்‌ஷ்மி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்

கடந்த வாரம் பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இதையடுத்து படம் வரும் 30-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் பட தீமில் பட்டுப்புடவைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சாப்ட் சில்க்கில் நெய்யப்பட்டுள்ள இந்த பட்டுப்புடவையில் உடல் பகுது முழுவதும் போர்வாள் டிசைன் கொடுக்கப்பட்டிருக்கிறது

கீழ்புற பார்டர் முழுவதும் த்ரிஷா - ஐஸ்வர்யா ராய் முகங்களும், முந்தானையில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் இடம்பெற்றுள்ளனர்.  இதன் விலை ரூ. 2,100

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com