2021-ம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை இந்தியாவை சேர்ந்த 21 வயதான ஹர்னாஸ் சாந்து வென்றிருக்கிறார். 

இந்த பட்டத்தை வென்ற மூன்றாவது இந்திய பெண்மணி ஹர்னாஸ் சாந்து ஆவார். முதல் இரண்டு பேர் சுஷ்மிதா சென் (1994ம் ஆண்டு) லாரா தத்தா (2000ம் ஆண்டு).

சுமார் 21 வருடங்களுக்கு பின்னர் இந்திய பெண் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை கைப்பாற்றியுள்ளார்.

ஹர்னாஸ் சாந்து மிஸ் பராகுவே மற்றும் மிஸ் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இரண்டு பெண்களை தோற்கடித்து இந்த பட்டத்தை வென்றுள்ளார். 

மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்ற 70வது அழகி ஹர்னாஸ் சாந்து 

ஹர்னாஸ் சாந்து சண்டிகரில் உள்ள சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர். 

Heading 2

Heading 3

Heading 3

ஹர்னாஸ் சாந்து ஆங்கிலம், இந்தி மற்றும் பஞ்சாபி ஆகிய மூன்று மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். 

ஹர்னாஸ் சாந்து தனது டீன் ஏஜ் பருவத்தில் இருந்தே மிஸ் சண்டிகர் 2017 உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறார். 

மிஸ் இந்தியா போட்டியிலும் ஹர்னாஸ் சாந்துவும் பங்கேற்றுள்ள நிலையில், அதில் அவர் முதல் 12 இடங்களை  பிடித்தார். 

ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் 2021 பட்டத்தை பெறுவதற்கு முன்னர் மிஸ் திவா 2021 என்ற பட்டத்தையும் வென்றுள்ளார். 

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com