ஓடிடியில் உள்ள தரமான
10 சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படங்கள்..!

கார்த்திக் காலிங் கார்த்திக் : ஹீரோ ஃபர்கான் அக்தர் கார்த்திக்கு ஓர் ஃபோன் அழைப்பு வருகிறது. அதில் பேசுபவர் தானும் கார்த்திக் என்கிறார். அதன்பின்னர் தொடங்குகிறது பிரச்னைகள். இறுதியில் போன் செய்தவர் யார் என்பதே படத்தின் கதை. அமேசான் ப்ரைம்,நெட்ஃப்ளிக்ஸில் இந்தப் படம் உள்ளது.

தலாஷ்: ஆமிர் கான், ராணி முகர்ஜி, கரீனா கபூர் முன்னணி கேரக்டரில் நடித்த படம். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுர்ஜான் சிங் ஷெகாவத் கேரக்டரில் ஆமிர்கான் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். நெட் ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைமில் இந்தப் படம் உள்ளது.

ஃபோபியா : டாக்ஸி டிரைவரால் ஹீரோயின் ராதிகா ஆப்தே பாலியல் தாக்குதலுக்கு ஆளாகிறார். தனக்கு நேர்ந்ததில் இருந்து மீண்டு வர புதிய வீட்டிற்கு செல்கிறார் ராதிகா. அதற்கு பின் நடக்கும் த்ரில்லிங்கான சம்பவங்களே படத்தின் கதை. அமேசான் பிரைமில் படம் உள்ளது.

ப்ரம் : கார் விபத்திற்கு பின்னர் ஹீரோயின் கல்கி கோச்லின் தனது சகோதரியின் சிம்லா வீட்டிற்கு மாறுகிறார். அதற்கு பின் நடக்கும் மர்ம சம்பவங்கள் திகிலூட்டும் வகையில் அமைந்திருக்கும். ஜீ5 ஓடிடியில் இந்தப் படம் உள்ளது.

டேமேஜ்டு : காணாமல் போகும் பெயின்டரை கண்டுபிடிப்பதற்கு நடக்கும் விசாரணையில் சீரியல் கொலைகாரன் குறித்த தகவல்கள் வெளிவருகின்றன. விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட இந்தப் படம் எம்.எக்ஸ். ப்ளேயரில் உள்ளது.

அபே : அபே பிரதாப் சிங் என்ற கேரக்டரில் நடிகர் குனால் கெமு நடித்துள்ளார். நகரில் நடக்கு சைக்கோத்தனமான குற்றங்களை விசாரிக்கும்போது, அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கின்றன. க்ரைம் விரும்பிகள் அவசியம் பார்க்கலாம். ஜீ5 ஓடிடியில் படம் உள்ளது

கேம் ஓவர் : பாலியல் தாக்குதலுக்கு ஆளான பின்னர் இருட்டை கண்டாலே நாயகி டாப்ஸிக்கு பயம் ஏற்படுகிறது. அப்போது, இளம்பெண்களை குறிவைத்து சீரியல் கொலைகள் நடக்கின்றன. கொலைகாரனின் அடுத்த டார்கெட் டாப்ஸி. நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம்.

ஆசூர் : வாரணாசியில் நடக்கும் சம்பவங்கள்தான் மையக் கதை. ஆசிரியர் பணிக்கு சென்ற தடயவியல் நிபுணர் நிகில் நாயர் மீண்டும் ஒரு சீரியல் கில்லரை கண்டுபிடிக்க சிபிஐக்கு வருருகிறார். அதன்பின்னர் நடக்கும் அதிரடி திருப்பங்கள் விறுவிறுப்பாக இருக்கும். வூட்டில் பார்க்கலாம்.

ப்ரீத் – இன்டூ தி ஷேடோஸ் : அபிஷேக் பச்சனின் 6 வயது மகள் கடத்தப்படுகிறார். மகளை விடுவிக்க தொகை பேசப்படுகிறது. கடைசியில் மகளை அபிஷேக் பச்சன் காப்பாற்றினாரா என்பதுதான் படத்தின் கதை. அமேசான் ப்ரைமில் இந்த சீரிஸ் உள்ளது.

தி கேர்ள் ஆன் தி ட்ரெய்ன் : நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம். நெட்ஃப்ளிக்ஸில் உள்ளது.

ருத்ரா - தி எட்ஜ் ஆஃப் டார்க்னஸ் : ஆங்கில வெப் சீரிஸ் லூதரின் ரீமேக்தான் இந்த படம். டிசிபி ருத்ரவீர் பிரதாப் சிங் கேரக்டரில் அஜய் தேவ்கன் நடித்திருப்பார். டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்தப் படம் உள்ளது.

இன்னும் பார்க்க

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?