கிக் படத்தில் கோவை சரளா

சந்தானம் நடிக்கும் கிக் என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகை கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். 

தமிழ் சினிமாவில் உள்ள வெகு சில பெண் நகைச்சுவை நடிகைகளில் கோவை சரளா முக்கியமானவர்.  இவர் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்

மேலும் கமல்ஹாசன் உடன் இவர் நடித்த சதிலீலாவதி திரைப்படம் அவருக்கு பெரும் பெயரை பெற்று கொடுத்தது

இதன் பின்பு தற்போது சந்தானம் நடிக்கும் கிக் என்ற திரைப்படத்தில் Fire புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்

கன்னடத்தில் வெளியாகி வெற்றி அடைந்த Zoom என்ற திரைப்படத்தை கிக் என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர்

Heading 2

இரு விளம்பர நிறுவனங்களில் வேலை செய்யும் நாயகன், நாயகி ஆகியோருக்கு இடையே நடைபெறும் போட்டியை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது

அதில் நாயகியுடன் வரும் வகையில் கோவை சரளா கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது

இந்த திரைப்படத்தில் சந்தானம் - கோவை சரளா ஆகியோரை தவிர தான்யா ஹோப், மன்சூர் அலிகான்,  மனோபாலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்

இது முழுக்க முழுக்க சந்தானம் வகை திரைப்படமாக இருக்கும் என பட குழுவினர் தெரிவிக்கின்றனர்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com