ஆண் குழந்தைக்கு தாயான கயல் சீரியல் நடிகை..!

சன் டிவியில் ஒளிப்பரப்பான பிரியமானவள் தொடரில் ஸ்வாதியாகவும்,
கண்மணி தொடரில் சினேகா கதாப்பாத்திரங்களிலும் நடித்தவர் செய்தி வாசிப்பாளர் அபி நவ்யா.

தற்போது சன் டிவி கயல் சீரியலில் ஆனந்தி ரோலில் நடித்து வருகிறார்.

இவருக்கு கடந்த ஆண்டு சீரியல் நடிகர் தீபக்குமாருடன் திருமணம் நடைப்பெற்றது. இந்த ஜோடி கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

தீபக் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் நவீன் கதாப்பாத்திரத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். 

பின்னர், என்றென்றும் புன்னகை சீரியலில் லீட் ரோலில் நடித்தார். இப்போது ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடித்து வருகிறார்.

திருமணத்துக்குப் பிறகு இருவரும் பிஸியாக இருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அபிநவ்யா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது அபிநவ்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இன்னும் பார்க்க

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?