குழந்தை பிறந்த பின்பு உடல் முன்பு போல் இல்லை - காஜல் 

குழந்தை பிறப்புக்கு பிறகு தனது உடல் முன்பு போல் இல்லை என காஜல் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்

காஜல் அகர்வால் 2020 ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். சமீபத்தில் கவுதம் - காஜல் தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது

குழந்தை பிறந்த பின்பு குழந்தையுடன் அதிக நேரம் செலவழித்து வந்த காஜல், தற்போது தனக்கான நேரத்தை செலவிட தயாராகியுள்ளார்

காஜல் தற்போது ஹார்ஸ் ரைடிங் பயிற்சி எடுத்து வருகிறார். இந்தியன் 2 படத்திற்காக இந்த பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்

பயிற்சியாக தொடங்கிய ஒன்று தற்போது பொழுதுப்போக்காக மாறியிருக்கிறது என்று கூறியுள்ளார்.இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்

‘பிரசவத்திற்கு 4 மாதங்களுக்குப் பிறகு நான் வேலைக்குத் திரும்பினேன். இது புதிதாக தொடங்குவது போல் இருக்கும் என்பதை நான் உணரவில்லை. என் உடல் எப்படி இருந்ததோ அதே போல் இல்லை

பிரவசத்திற்கு முன்பு நாள் முழுவதும் வேலை பார்த்த பின்பு கூட ஜிம்மிற்கு செல்வேன்’.குழந்தைக்குப் பிறகு, என் ஆற்றல் நிலைகளைத் திரும்பப் பெறுவது கடினமாக உள்ளது

‘நம் உடல்கள் மாறலாம்’.நமக்குள் ஒரு அடங்காத பேஷன் மாற தேவையில்லை.நாம் நமக்காக தொடர்ந்து ஒவ்வொரு நாளையும் எண்ணிக்கொண்டே இருக்க வேண்டும்

இது நம் தேர்வுகளில் குற்ற உணர்ச்சியில்லாமல் இருப்பதற்கும், நாம் எதைத் தேர்வு செய்கிறோம் என்பதைப் பற்றியது

இந்தியன் 2 படக்குழுவினருடன் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வேலையில் புதிய திறன்களைக் கற்றுக்கொண்டு பின்னர் அவற்றை பொழுதுபோக்காக பின்பற்றுகிறேன்

இந்தத் தொழிலின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் அதிர்ஷ்டசாலி . தொடர்ந்து கற்றுக்கொள்வதற்கும் என்னைப் மேம்படுத்தி கொள்வதற்கும் கிடைத்த வாய்ப்புகளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார் காஜல்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com