வெப்சீரிஸில் நடிக்கும் இலியானா… 

நடிகை இலியானா முதன்முறையாக வெப் சீரிஸில் நடிக்க உள்ளார்

இதில் அவரது கேரக்டர்தான் முதன்மை கதாபாத்திரம் என தகவல்கள் தெரிவிக்கின்றன

2012-ல் வெளியான நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் இலியானா

இந்த படத்தில் விஜய் மற்றும் இலியானா ஆடும் ஒல்லி பெல்லி என்ற பாடல் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது

35 வயதாகும் இலியானா பல்வேறு இந்தி படங்களில் நடித்திருக்கிறார்

கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து இலியானா திரைத்துறையில் இருந்து வருகிறார்

தற்போது தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் இலியானா ஆர்வம் காட்டி வருகிறார்

இந்நிலையில் முதன்முறையாக அவர் வெப் சீரிஸில் நடிப்பார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன

கடைசியாக இலியானா நடித்த தி பிக் புல் என்ற திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது

இலியானா நடிக்க உள்ள வெப் சீரிஸை பிபிசி ஸ்டுடியோஸ் இந்தியாவுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது

விரைவில் வெப்சீரிஸ் இடம்பெறவுள்ள நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் அறிவிக்கப்பட உள்ளது

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com