விஜய் டூ விஜயகாந்த் வரை..! பிரபல நடிகர்களின் ஷூட்டிங் ஸ்பாட்டான திருப்பூர் கோயில் பற்றி தெரியுமா ?

இந்த கோவிலின் பெயர் திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில். கோவிலை சுற்றியுள்ள பகுதிகளிலும் பல்வேறு படங்களில் இடம் பெற்றுள்ள காட்சிகள் ஷூட் செய்யப்பட்டுள்ளன

விஜய் நடித்த ஜில்லா படத்தில் வரும் ‘பாட்டு ஒன்னு கட்டுக்கட்டு தோழா’ என்ற பாடலின் முதல் காட்சிகள் இந்த கோவிலில் தான் எடுக்கப்பட்டது

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் படத்தில் வரும், ஓப்பனிங் சீன் இந்த பகுதியில் எடுத்தது தான்

நவரசநாயகன் கார்த்திக் - நக்மா நடித்த மேட்டுக்குடி படத்தில் இடம்பெற்ற ‘சரவண பவ’ பாடலின் சில காட்சிகள் இங்கே எடுக்கப்பட்டன

கிழக்கு வாசல் படத்தில் கார்த்தியும் சின்னி ஜெயந்தும் பிள்ளையாருக்கு தண்ணீர் மோந்து ஊற்றும் காட்சிகள் இங்குதான் எடுக்கப்பட்டது

சரத்குமார்-நக்மா நடித்த ஜானகிராமன் படத்தில் வரும் சில காட்சிகள் இந்த அமணலிங்கேஸ்வரர் கோவிலில்தான் ஷூட் செய்யப்பட்டுள்ளன

பிரபு-குஷ்பு நடித்த உத்தமராசா
படத்தின் சில காட்சிகள் இங்கே எடுக்கப்பட்டுள்ளது

முரளி நடித்த சின்ன பசங்க நாங்க படத்தில் வரும் கவுண்டமணி, செந்தில் நடித்த ஒரு காமெடி காட்சி இங்குதான் எடுத்திருப்பார்கள்

சொக்கத் தங்கம் படத்தில் விஜயகாந்தும், கவுண்டமணியும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் காட்சிகள் இங்குதான் ஷூட் செய்யப்பட்டது

முரளி-ரஞ்சிதா நடித்த என்னாசை மச்சான் படத்தில் இடம் பெற்ற, பாடல் காட்சியில் ‘வேண்டும் வரம் தரவேண்டும் கண்ணில் ஒரு காந்தம்’ என்ற பாடல் வரியின்போது தோன்றும் காட்சி இங்கு எடுக்கப்பட்டதுதான்

 ‘ஜெயம்’ படத்தின் சில காட்சிகள்
 இங்கு எடுக்கப்பட்டுள்ளன

இன்னும் பார்க்க

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?