ரசிகை டூ மனைவி - ரவீந்தர் குறித்து மகாலட்சுமி நெகிழ்ச்சி!

தன் கணவரை நினைத்து பெருமைப்படுவதாக நடிகை மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கியவர் மகாலட்சுமி. 90’ஸ் கிட்ஸ் பலரின் கிரஷ்ஷாக வலம் வந்த இவர், பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்

இவருக்கு அனில் என்பவருடன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர்

இதையடுத்து கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்

முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் ரவீந்தருக்கும் இது இரண்டாவது திருமணம் தான்

இந்நிலையில் தற்போது தனது கணவரை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார் மகாலட்சுமி

ரவீந்தரின் ஜிம் அட்ராசிட்டீஸ் வீடியோவை பகிர்ந்து, ”ஒரு வருடத்திற்கு முன் இந்த வீடியோவை ரசிகையாக பார்த்தேன், இப்போது பெருமையுடன் பகிர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்

அதோடு கணவர் ரவீந்தருடன் ஹோட்டலுக்கு சென்ற படத்தைப் பகிர்ந்து, என் கைகளை பிடித்துக்கொள், என் இதயத்தைப் பிடித்துக்கொள், எப்போதும் என்னைப் பிடித்துக்கொள் என தலைப்பிட்டிருக்கிறார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com