பிக் பாஸ் லாஸ்லியாவுக்கு என்ன ஆச்சு?
பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் லாஸ்லியா.
இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்து பிரபலமானவருக்கு தமிழில் பிக் பாஸ் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டவர் சின்னத்திரை டூ வெள்ளித்திரை பறந்து விட்டார்.
கவினுடன் காதல், சாக்ஷியுடன் சண்டை போன்ற சர்ச்சையில் சிக்கினாலும் ரசிகர்கள் மனதை ஸ்கோர் செய்து அதன் மூலம் புகழடைந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு இவருக்கு வெள்ளித்திரை வாய்ப்பும் தேடி வந்தது. 2 படங்களில் நடித்தார். அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார்.
பிக் பாஸில் ஜப்பியாக இருந்தவர், வெளியே வந்த பின்பு கடுமையாக உடல் எடை குறைத்து படங்களில் நடிக்க தொடங்கினார்.
இது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் இப்போது அந்நியாயத்திற்கு உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் லாஸ்லியா.
இவர் சமீபத்தில் இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் என்ன ஆச்சு? உடம்பு எதாச்சும் சரியில்லையா? என கேட்க வைக்கும் அளவுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது
ரசிகர்களும் இதே கேள்வியை கமெண்டில் கேட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு மிகவும் ஒல்லியான தோற்றத்திற்கு லாஸ்லியா மாறி இருக்கிறார்.
வெப் ஸ்டோரீஸ்
பார்க்க...
இன்னும்