ஆண்டின்னு கலாய்த்தவர்களுக்கு செம்ம ரிப்ளை 

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் எதிர்நீச்சல்' தொடரில் அப்பாவி மருமகளாக நந்தினி என்ற ரோலில் கலக்கி வருகிறார் ஹரிப்பிரியா இசை. இவர் இதற்கு முன்பு பிரியமானவளே, கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து இருக்கிறார்

ஹரிப்பிரியாவுக்கு ஏற்கெனவே விவாகரத்து ஆகிவிட்டது. தற்போது விஜே மற்றும் நடிகையாக சன் டிவியில் கலக்கி கொண்டிருக்கிறார். குறிப்பாக நந்தினி ரோல் இவருக்கு மிகப் பெரிய ரீச்சை வாங்கி தந்துள்ளது

ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்காக ஹரிப்பிரியா இன்ஸ்டா லைவில் உரையாடினார். அப்போது பல விஷயங்களை அவர் ஷேர் செய்தார்

நந்தினி கதாபாத்திரம் தனது மனதுக்கு நெருக்கமான ஒன்று என்றார். அதற்கு இயக்குனர் திருச்செல்வத்துக்கு நன்றி கூறினார். அதன் பின்பு தன்னை பற்றி வரும் பாடி ஷேமிங் கமெண்டுகள் குறித்தும் அவர் பேசினார்

சீரியலில் எப்போதுமே புடவையில் தான் ஹரிப்பிரியா வலம் வருவார். இதை பார்த்த ரசிகர்கள் அவர் குண்டாகி விட்டதாக, ஆண்டி ஆகிவிட்டதாக பல கமெண்டுகளை பதிவு செய்து இருக்கிறார்கள்

இதை பற்றி பேசிய ஹரிப்பிரியா, “ ஆண்டியா இருந்தா தான் என்ன?. வயசு ஆகுறது இயற்கை. வயசு ஏறிட்டு போறத எப்படி தப்பா சொல்ல முடியும். எல்லாருக்குமே வயசு ஆகத்தான் செய்யும். ”என்று கூறியுள்ளார்

 “ எனக்கு காலில் அடிப்பட்டு இருக்கு, அதனால வொர்க் அவுட் செய்ய முடியாது. இங்கு ஒல்லி, சிவப்பு இதுதான் அழகு, கறுப்பு, குண்டு அழகு இல்லை அப்படியெல்லாம் இல்லை, எல்லாமே அழகு, எல்லோரும் அழகு “ 

இந்த லைவில் ரசிகர் ஒருவர் அவரை ஆண்டி என அழைக்க அவரிடமே இளமையாக இருக்க டிப்ஸ் கொடுங்கள் எனவும் நச் பதில் கொடுத்தார் ஹரிப்பிரியா

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com