30000 கிரிஸ்டலில் வித்தியாசமான தோற்றம்.. ஃபேஷன் ஷோவில் கலக்கிய ராப் பாடகி.!
27 வயதான பாடகி பாரிஸில் நடந்த சியாபரெல்லி ஹாட் கோச்சர் பேஷன் ஷோவில் சிவப்பு கிரிஸ்டல்களில் பிரகாசித்தார்.
அவரின் இந்த ஷோ-ஸ்டாப்பிங் ஃபேஷன் தோற்றத்திற்காக 30,000 ஸ்வரோவ்ஸ்கி கிரிஸ்டல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பாடகியின் முழு தலை, முகம், மார்பு மற்றும் கைகள் கலைநயத்துடன் சிவப்பு நிற கிரிஸ்டல் கற்களால் அலங்கரிப்பட்டது.
டோஜாவின் பளபளப்பான தோற்றம் பிரபல ஒப்பனை கலைஞரான பாட் மெக்ராத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டது.
இந்தத் தோற்றம் முழுமைப்பெற 30,000 கிரிஸ்டல்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், இதனை முடிக்க கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் ஆனதாகவும் அவர் ரசிகர்களிடம் பகிர்ந்துக் கொண்டார்.
இதையடுத்து டோஜா கேட்டின் இந்த தோற்றம் இணையத்திலும் கவனம் பெற்று வருகிறது.