வெந்து தணிந்தது காடிற்கு பிரபலங்களின் வாழ்த்து 

சிம்புவின் வெந்து தணிந்தது படத்திற்கு பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இது எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அக்னி குஞ்சொன்று கண்டேன் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது

சித்தி இதானி ஹீரோயினாக நடித்துள்ளார்.

 இவர்களுடன் ராதிகா சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

 இதையடுத்து வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

வெந்து தணிந்தது காடு குறித்து நிறைய நல்ல செய்திகளைக் கேட்க முடிகிறது. படம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன், என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

சிம்புவுக்கும், கெளதம் மேனனுக்கும் நடிகர் சூரி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்

வெந்து தணிந்தது காடு படக்குழுவினருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்

கடின உழைப்பும் நம்பிக்கையும் என்றும் தோற்பதில்லை நண்பா என சிம்புவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகர் மஹத்

வெந்து தணிந்தது காடு படக்குழுவுக்கு நடிகர் கிருஷ்ணா தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்

என்னுடைய சகோதரர் சிம்புவுக்கு இதயத்திலிருந்து வாழ்த்துகளை தெரிவிக்கிறேன் என இசையமைப்பாளர் எஸ்.தமன் தெரிவித்துள்ளார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com