செஸ் ஒலிம்பியாட் 2022

அனைத்து ஏற்பாடுகளும் தயார்

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ள மாமல்லபுரம், காணும் இடமெல்லாம் வண்ணமயமாக காட்சியளிக்கிறது

உலகமே உற்றுநோக்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரம் நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா, சென்னை நேரு மைதானத்தில் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது

187 நாடுகளை சேர்ந்த ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் 356 அணிகள், சதுரங்க ஆட்டத்தில் காய்களை
 நகர்த்த காத்திருக்கின்றன

 மாமல்லபுரம் பூஞ்சேரியில் 22 ஆயிரம் சதுர அடியில் ஓரு அரங்கமும், 52 ஆயிரம் சதுர அடியில் மற்றொரு பிரமாண்ட அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன

சென்னையில் ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ‘தம்பி’ என்கின்ற குதிரை சிலை, 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் அதிகாரப்பூர்வ சின்னமாக திகழ்கிறது

ஆங்காங்கே, சுவர் ஓவியங்கள் வரையப்பட்டும், நகரின் முகப்பில் உள்ள சிற்பக்கலைத் தூண், அனைவரையும் கவரும் வகையில் பொலிவுற்றுள்ளது

சென்னை நேப்பியர் பாலம் முதல் மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதி வரையிலான வழித்தடத்தில் உள்ள கருப்பு, வெள்ளை பெயின்டிங் மற்றும் ஓவியங்கள், பதாகைள் அனைவரையும் வரவேற்கும் வகையில் அமைந்துள்ளன

பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் பூஞ்சேரி பகுதியில் மட்டும் 6 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com