பீரியட்ஸ் குறித்து ஓப்பனாக பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்..

மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற
 ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் தமிழில் ரீமேக்காகியுள்ளது

இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்,
 ராகுல் ரவீந்திரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

இந்நிலையில் நேற்று தி கிரேட் இந்தியன் கிச்சன் படக்குழுவினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது

அப்போது பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், “கடவுள் எல்லோருக்கும் ஒண்ணு தான். ஆண் - பெண் வித்தியாசமெல்லாம் கடவுளுக்கு இல்லை

என் கோயிலுக்கு அவர்கள் வரலாம், இவர்கள் வரவேண்டாம் என எந்த கடவுளும் சொல்லவில்லை

 இது சாப்பிடக்கூடாது, இது தீட்டு என எந்தக் கடவுளும் சொல்லவில்லை, இதையெல்லாம் நாம் தான் கிரியேட் பண்ணியிருக்கிறோம்

பீரியட்ஸ் நேரத்தில் அதை செய்யக் கூடாது, இதை செய்யக் கூடாது, கோயிலுக்கு வரக்கூடாது என்று எந்த கடவுளும் சொல்லவில்லை

அதை உருவாக்கியது மக்கள் தான். நான் எப்போதும் இதை நம்புவது கிடையாது” என்று குறிப்பிட்டுள்ளார்

விஜய் தேவரகொண்டாவுடன்
 டூர் சென்றால் என்ன தவறு ?ராஷ்மிகா ஆவேச கேள்வி..