தமிழில் நான் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தார் - மஞ்சு வாரியர்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை மஞ்சு வாரியர்.

நாகர்கோவிலில் பிறந்த இவர், மலையாள திரையுலகில் நுழைந்த 3 ஆண்டுகளில் 20 படங்களில் நடித்தார்.

தனுஷ் நடித்த அசுரன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான இவர், அஜித்துடன் துணிவு படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தமிழில் தான் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்ததாக மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து மஞ்சு வாரியர் அளித்த பேட்டியில், “அசுரன் படத்துக்கு முன்பே பல தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. 

ஆனால் அப்போது நிறைய மலையாள படங்களில் ஒப்பந்தமாகியிருந்ததால் என்னால் நடிக்க முடியவில்லை.

இதனால் பல தமிழ் படங்களின் வாய்ப்பை தவற விட்டிருக்கிறேன். அதில் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படமும் ஒன்று.

அந்தப் படத்தில் நடிக்க முதலில் என்னை தான் அழைத்தார் இயக்குநர் ராஜிவ்மேனன். 

என்னால் நடிக்க முடியாமல் போன பிறகே ஐஸ்வர்யா ராய் அதில் நடித்தார்” என மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.

இன்னும் பார்க்க