தனது புதிய நண்பரை அறிமுகம் செய்த சமந்தா.!

பிரபல தென்னிந்திய நடிகை சமந்தா ரூத் பிரபு 'சகுந்தலம்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகிறது.

இதற்கிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா தனது நண்பரை இன்ஸ்டாவில்  அறிமுகப்படுத்தியுள்ளார்.

அது வேறு யாருமல்ல, அவரது புதிய கண் கண்ணாடி தான். “கண்ணாடிகள் எனது புதிய நண்பர்கள்” எனக் குறிப்பிட்டு இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் புதிய படம் பகிர்ந்துள்ளார்.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா நீண்ட இடைவெளிக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சமீபத்தில் பகிர்ந்திருந்தார்.

அவர் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல திரும்புவதாக மகிழ்ச்சியடைந்துள்ளனர் ரசிகர்கள்.

இன்னும் பார்க்க

இன்னும் பார்க்க

இன்னும் பார்க்க

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?