நடிகை ஹன்சிகாவின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள்.!

ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேல் கதுரியாவின் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெறவுள்ளது. 

டிசம்பர் 2-ஆம் தேதி சூஃபி இரவு, டிசம்பர் 3-ஆம் தேதி மெஹந்தி மற்றும் சங்கீத் நடைபெறும். 

டிசம்பர் 4-ஆம் தேதி, ஹல்டி விழா நடைபெறும், அதைத் தொடர்ந்து மாலையில் திருமணமும், கேசினோ தீமில் இரவு பார்ட்டியும் நடைபெறுகிறது.

இவர்களின் திருமணத்திற்கு ஹன்சிகா மற்றும் சோஹேலின் குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துக்கொள்கிறார்கள்.

ஹன்சிகா மற்றும் சோஹேலின் திருமண தேதி நெருங்குவதை அடுத்து 'மாதா கி சௌகி' என்ற சடங்கு சமீபத்தில் நடந்தது.

மாதா கி சௌகி விழாவில் மணமகனும், மணமகளும் சிவப்பு நிறத்தை தீமாக தேர்ந்தெடுத்தனர்.

ஹன்சிகா ஒரு பிரைட் சிவப்பு நிற புடவையில் அழகாக இருந்தார். சோஹேல் கதுரியா, சிவப்பு நிற ஷெர்வானியில் காட்சியளித்தார். 

ஹன்சிகா மற்றும் சோஹேலின் மாதா கி சௌகி என்ற சடங்கின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்னும் பார்க்க

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?