கைநிறைய சம்பளத்துடன் சென்னையில் வேலைவாய்ப்பு..
முழு விவரம் இதோ..

சென்னை மாவட்ட வருவாய் அலகில் 9 வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 12 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 5ம் வகுப்பு கல்வித் தகுதி கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டின் வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக உள்ள  கிராம நிர்வாக அலுவலர்களுக்கு  கீழாக கிராம உதவியாளர்கள்  நியமிக்கப்படுகின்றனர்

கிராம உதவியாளர் பணி என்றால் என்ன?

வரி வசூலித்தல், கிராம கணக்குகளை நிர்வகித்தல், நில வருவாய் ஆவணங்களைத் தயாரித்தல்,  கணக்குகளை முறையாக சரியாக வைத்து கொள்ளுதல், பிறப்பு, இறப்பு போன்ற பல்வேறு பதிவேடுகளை தயாரித்தல் மற்றும் புதிப்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்

இந்த கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 30.09.2022 அன்று 21 வயதினை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.  பொதுப்பிரிவினர் அதிகபட்சமாக 32 வயது வரையும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகபட்சமாக 37 வயது வரையும் இருத்தல் வேண்டும்

வயது வரம்பு:

9 வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 12 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன

காலிப்பணியிடங்கள்: 

வரப்பெறும்  விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும். பின்னர்,  எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்

தெரிவு முறை:

விண்ணப்பிக்கும் சென்னை மாவட்ட வருவாய் வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் குறைந்த பட்ச கல்வித்தகுதியாக ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

இதர நிபந்தனைகள்:

Special Time Scales of pay Matrix Level 6 (Minimum Rs.11;100- Maximum Rs.35,100) என்ற அடிப்படையில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் நேரடி விண்ணப்பங்கள் மூலம் நியமனம் செய்யப்பட இருக்கிறது

சம்பள நிலை: 

தமிழக அரசின் https://www.tn.gov.in , வருவாய் நிருவாகத் துறையின் இணையதளம் (https://cra.tn.gov.in) மற்றும் சென்னை மாவட்ட அதிகாரப்பூர்வமான இணையதளத்தின்  (https://chennai.nic.in) மூலம் விண்ணப்பங்கள்  சமர்ப்பிக்க வேண்டும்

விண்ணப்பிப்பது எப்படி?

நவம்பர் மாதம் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

இன்னும் பார்க்க

கூடுதல் வேலைவாய்ப்பு செய்திகளை பார்க்க க்ளிக் பண்ணுங்க..