TNPSC குரூப் 4 ரிசல்ட் - முக்கிய அப்டேட்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதி குறித்து ஜனவரி தொடக்கத்தில் முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது

ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பில் டிசம்பரில் வெளியாகும் என்று தெரிவித்த நிலையில் தற்போது முடிவுகள் டிசம்பரில் வெளியாக வாய்ப்பில்லை என்று தெரிகிறது

குரூப் 4 தேர்வைத் தமிழ்நாடு முழுவதும் 18.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர

பணியிடங்களில் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் அதிகப்படியான தேர்வர்களுக்கு அரசுப் பணிக்கான வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

2023 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையில் குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்கள் குறிப்பிடவில்லை

பணியிடங்கள் அதிகரித்தால் இந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கே அதிக அளவில் வேலைவாய்ப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது

இன்னும் பார்க்க

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?