மிகவும் எதிர்பார்க்கப்படும் வங்கி தேர்வுகளில் ஒன்றான எஸ்பிஐ ப்ரோபேஷனரி ஆபீசர் பணிக்கான விண்ணப்ப செயல்முறை 12 ஆம் தேதி முடிவடைகிறது
இதில் 648 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும், 464 இடங்கள் ஓபிசி பிரிவினருக்கும், 160 இடங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கும், 270 இடங்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கும், 131 இடங்கள் பட்டியல் பழங்குடியியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன
எஸ்பிஐ ப்ரோபேஷனரி ஆபீசர் காலியிடங்கள்: 1,673
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்
கல்வித் தகுதி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.04.2022 அன்று 21-க்கு மேலும், 30-க்கு கீழும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்
வயது வரம்பு :
ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ. 41,960/ வரை பெறலாம்
சம்பள விவரம்:
இப்பதவிக்கான தேர்வு முறையானது 3 முறைகளில் நடைபெற உள்ளது. முதல் நிலைத்தேர்வு(Written), முதன்மைத் தேர்வு(Main Examination), திறனறிவுத் தேர்வு (psychometric test) மற்றும் நேர்காணல் (Interview)
தெரிவு முறை :
முதல் நிலைத் தேர்வானது டிசம்பர் 17, 18, 19,20 ஆகிய தேதிகளிலும், முதன்மைத் தேர்வானது 2023 பிப்ரவரி மாதத்திலும் , திறனறிவு மற்றும் நேர்காணலுக்கான அழைப்பு 2023 பிப்ரவரி/மார்ச் மாதத்திலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த ப்ரோபேஷனரி ஆபீசர் பதவிக்கு ஏற்கனவே 4 முறை முதன்மைத் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியாது