தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணியில் காலியாக உள்ள 64 மீன்துறை ஆய்வாளர் (INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT)பதவிக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது
இந்த பதவிக்கான தேர்வு கணினி வழியில் நடத்தப்படும் என்றும், தேர்வுக்கு நவம்பர் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது
தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணியில் காலியாக உள்ள 64 மீன்துறை ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது
காலியிடங்கள்: 64
அறிவிக்கை நாள்: 14.10.202 2
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள் : 12.11.2022
64 மீன்துறை ஆய்வாளர் பதவிக்கு முக்கியமான நாட்கள்:
தாள் -1 08.02.2023 முற்பகல் 09.30 மணி முதல் பிற்பகல் 11.00 மணி வரை.(200 வினாக்கள்)
கீழ்கண்டவற்றுள் ஏதேனும் ஒன்று :மீன்பிடி தொழில்நுட்பம் மற்றும் ஊடுருவல் (பட்டயப்படிப்புத் தரம்) (அல்லது) விலங்கியியல் (முதுநிலை)
கணினி வழித்தேர்வு நடைபெறும் நாட்கள் மற்றும் நேரம்:
தாள் -2 - 08.02.2023 பிற்பகல் 02.30 மணி முதல் பிற்பகல் 05.30 வரை
பகுதி -அ: கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு(10ம் வகுப்புத் தரம்)
பகுதி -ஆ: பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்)
ரூ.37,700 - ரூ. 1,19,500
சம்பள விவரம்
மீன்துறை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. ஏனையோர் 1.07.2022 அன்று, 32 வயதினை பூர்த்தி அடைந்திருக்க கூடாது
வயது தகுதி:
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் (அல்லது) பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மீன்வள அறிவியல் பாடநெறியில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்
கல்வித் தகுதி:
விலங்கியல் அல்லது கடல் உயிரியல் அல்லது கடலோர மீன் வளர்ப்பு அல்லது கடல் வேளாண்மை அல்லது சிறப்பு விலங்கியல் அல்லது கடலோர பொறியியல் அல்லது கடலியல் பாடநெறிகளில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்