கட்டிய வீட்டை வாங்கப் போறீங்களா?
இதையெல்லாம் செக் பண்ணுங்க!

வீடு கட்டுவது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஏற்கனவே கட்டிய வீட்டை வாங்குவது என்னும் போது, நீங்கள் பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்

சில முக்கிய விஷயங்களையும் கவனிக்க வேண்டும். பின்வரும் விஷயங்கள் விற்பனை ஒப்பந்தத்தில் இருக்க வேண்டும்

ஆறு மாதங்களுக்குள் வீட்டை வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் மேற்கொள்ளலாம் அல்லது விற்பவர் ஆறு மாதங்களுக்குள் உங்களிடமிருந்து முழு தொகையை பெற்றுக்கொண்டு வீட்டை உங்கள் பெயருக்கு மாற்றம் செய்து தருவதாக ஏற்றுக் கொள்ளலாம்

நீங்கள் வீடு வாங்கும் போது  அட்வான்ஸ் செலுத்திய பின்பு, அதன் பிறகு ஏதேனும் ஒரு காரணத்தினால் வீட்டை வாங்க முடியாத சூழல் ஏற்படும் போது நீங்கள் செலுத்திய அட்வான்ஸ் தொகை விற்பவரால் உங்களுக்கு திருப்பி செலுத்தப்படாது

பொதுவாகவே ஒரு மனை வாங்கும் போது அதற்கு பட்டா இருக்கிறதா, அது யார் பெயரில் இருக்கிறது, அதனுடைய சர்வே எண், வில்லங்கம் உள்ளதா என்று எல்லாவற்றையும் தெளிவாக பார்த்து
 தான் வாங்குவோம்

வீடு யார் பெயரில் இருக்கிறது, வீட்டின் பெயரில் கடன் வாங்கப்பட்டு இருக்கிறதா, வீட்டின் சொத்து மதிப்பு, வீட்டினுடைய பட்டா, இதற்கு முந்தைய வீட்டு உரிமையாளர்கள், நிலத்தின் மதிப்பு என்று அனைத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்

ஏற்கனவே கூறியுள்ளது போல விற்பனை ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உரிமை வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவருக்குமே இருக்கிறது

வீடு குடும்பத்தின் ஒரு பொது சொத்தாக இருந்தால், அது விற்பவரின் பங்கு என்பதை உறுதி செய்வது விற்பவரின் பொறுப்பு

வீட்டை பற்றிய விவரங்கள் தெரிவித்தால் மட்டும் போதாது, அது சம்பந்தமான அனைத்து ஆவணங்கள், பதிவுகள் மற்றும் சான்றிதழ்களையும் வாங்குபவருக்கு, விற்பவர் வழங்க வேண்டும்

குறிப்பாக வீட்டை பற்றி அரசாங்கத்திடம் பதிவு செய்யப்பட்டிருக்கும் அனைத்து ஆவணங்களின் நகல்களையும் முதலிலேயே வாங்குபவருக்கும் விற்பவர் வழங்க வேண்டும்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...                                                                                                                                             

இன்னும்

News18Tamil.com