வீட்டை விற்க போறீங்களா? அப்போ இதை படிங்க..

ஒரே அடியாக வீட்டை விற்பனை செய்வதைக் காட்டிலும், வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தால் அதன் மூலமாக என்ன வருமானம் வந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் கணக்கீடு செய்து கொள்ள வேண்டும்

உங்கள் பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி மூலமாக வந்த பூர்வீக சொத்து என்றாலும், அந்த வீட்டை தக்க வைத்துக் கொள்ள முன்னுரிமை கொடுங்கள். உண்மையிலேயே அந்த வீட்டை விற்றுதான் நமது பணத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக் கூடிய சூழல் இருக்கிறதா என்பதை பரிசீலனை செய்து கொள்ளுங்கள்

வீடு கட்டி முடித்து எத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளன, தற்போது வீட்டின் ஸ்திரத்தன்மை எந்த அளவுக்கு பலமாக இருக்கிறது? இது இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நீடித்து நிற்கும் என்பதை எல்லாம் நாம் கணக்கீடு செய்து
 கொள்ள வேண்டும்

வீட்டை விற்பது என்று முடிவு செய்து விட்டால், இன்னும் எவ்வளவு நாட்களுக்குள் அதை விற்பனை செய்ய வேண்டும் என்பதை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்

அண்மைக் காலத்தில் நம் பகுதியில் நம்முடைய வீட்டைப் போலவே ஏதேனும் வீடு விற்பனை செய்யப்பட்டிருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு, அதற்கு ஈடாக மதிப்பீடு செய்ய வேண்டும்

எந்தவித காரணமும் இலக்கும் இல்லாமல் வீட்டை விற்பனை செய்யக் கூடாது. எதற்காக வீட்டை விற்பனை செய்யப் போகிறோம், அந்தப் பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறோம் என்று தெளிவான திட்டமிடல் உங்களுக்கு
 இருக்க வேண்டும்

சந்தை விலையில் இருந்து குறைவான விலைக்கு நம் வீட்டை விற்பனை செய்து விடக் கூடாது. ஆகவே, நம் வீட்டிற்கு இப்போதைய சந்தை மதிப்பு என்ன என்பதை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்

சொத்து தொடர்பான ஆவணங்களை நாம் சரிபார்க்க வேண்டும். குறிப்பாக பூர்வீக சொத்தாக இருப்பின், அது யார் பெயரில் உள்ளது, அதை விற்பனை செய்ய ஏதேனும் தடங்கல் உள்ளதா என்பதை நாம் ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளை எட்ட வேண்டும்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com