பண பிரச்சனைகளை தீர்க்கும் 50-30-20 விதி பற்றி தெரியுமா?

சம்பாதிக்கும் பணத்தை சரியான முறையில் செலவு செய்தும், சரியான முறையில் சேர்த்து வைத்து வாழ்ந்தாலுமே வாழ்க்கையில் பணம் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளை நம்மால் தீர்க்க முடியும்

நாம் செலவு செய்யும் தொகையை விட நமக்கு வரும் வருமானம் அதிகமாக இருக்க வேண்டும். அதற்கென்று சரியான வரவு செலவு பட்டியலையும் நாம் தயார் செய்து வைத்துக்
கொள்வது அவசியம்

பொருளாதார வல்லுனர்களும் பல செல்வந்தர்களும் நீண்ட காலமாக கடைபிடித்து வருவதும், வலியுறுத்தி வருவதுமான ஒரு விதி தான் இந்த
50-30-20 விதி

விவிஃபை இந்தியா பைனான்ஸ் –ன் நிறுவனரும் சிஇஓ –ம் ஆன அணில் பினாபலா இது மிகவும் அவசியமானது என்கிறார்

ஒருவர் தன்னுடைய ஒரு மாதத்தின் மொத்த வருமானத்தில் 50 சதவீத பணத்தை உணவு உடை இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும்

 30 சதவீத பணத்தை கேளிக்கை செலவுகளுக்கும், மேலும் நாம் விரும்பிய காரியங்களோ அல்லது பயணங்களையும் மேற்கொள்வதற்கும் பயன்படுத்த வேண்டும்

மீதமுள்ள 20% பணத்தை எதிர்காலத்திற்கான சேமிப்பாகவும், முதலீடு செய்தும் சேர்த்து வைக்க வேண்டும்

இவ்வாறு செய்வதன் மூலம் அவசர காரியங்களுக்கும் அல்லது மருத்துவ தேவைகளுக்கு கூட நம்மால் எந்தவித கஷ்டமும் இல்லாமல் நம்முடைய சேமிப்பில் இருந்து பணத்தை எடுத்து செலவழிக்க முடியும்

நீங்கள் தேவையற்ற செலவுகளை குறைத்தும், வருமானத்தை அதிகரித்தும் இந்த விதியை பயன்படுத்தும் போது இது மிகப்பெரும் அளவில் பொருளாதாரச் சுமையை குறைக்குமாம்

நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு சேர்த்து வைக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களால் எதிர்காலத்தில் பொருளாதாரச் சுமையின்றி மகிழ்ச்சியாக இருக்க முடியும்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com