இந்த விஷயத்துக்கு மட்டுமே கோல்ட் லோன் வாங்குவது நல்லது..

இந்தியாவில் பெரும்பான்மையாக வாழும் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு எப்போதும் தீர்க்க இயலாத பிரச்சினையாக இருப்பது பணப் பிரச்சனை தான். சிறுக, சிறுக சேர்த்து கொஞ்சம் நகை வைத்திருப்பார்கள்

கோல்டு லோனில் வட்டி குறைவு என்பதால் மக்கள் இதையே தேர்வு செய்கின்றனர்

 கஷ்டம் என்று வருகிறபோது வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் பெற அதே நகைகள் தான் உதவியாக இருக்கின்றன

பிள்ளைகளுக்கு கல்விக் கடன் கிடைப்பது நல்ல விஷயம் தான். ஆனால், எல்லோருக்கும் இந்த வாய்ப்பு அமைந்து விடுவதில்லை. கடந்த கால நடவடிக்கைகள், குறைவான மதிப்பெண் போன்ற காரணங்களை காட்டி கல்விக்கடன் மறுக்கப்படலாம். அதுபோன்ற சமயத்தில் தயங்காமல் நகைக்கடன் பெறலாம்

கல்வித் தேவைகள்

 விபத்துகள், உயிர் காக்கும் ராஜ உறுப்புகளின் பாதிப்புகள் ஏற்படுகின்ற சமயத்தில் பெரும் மருத்துவ செலவு ஏற்படுவதை தவிர்க்க இயலாது. அத்தகைய தருணங்களில் நகைக்கடன் பெறலாம்

மருத்துவ தேவைகளுக்கு

கல்யாண செலவுகளுக்கு பணம் இன்றி தவிக்கையில், நகைக்கடனை காட்டிலும் சிறப்பான வாய்ப்பு வேறெதுவும் இருக்க முடியாது. திருமணத்தில் கிடைக்கும் மொய் மூலமாக கடனை உடனடியாக அடைக்க முடியும்

திருமணம்

சுற்றுலா காரணத்திற்காக நகைக்கடன் பெறுவது அநாவசியமாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால், நகைக்கடனை குறுகிய காலத்திற்குள் அடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்றால், கடன் பெற்று சுற்றுலா செல்வதில் எந்தத் தவறும் இல்லை

சுற்றுலா தேவைகளுக்கு

இன்னும் பார்க்க

கூடுதல் வேலைவாய்ப்பு செய்திகளை பார்க்க க்ளிக் பண்ணுங்க..