90 லட்சம் பயனாளர்களின் கார்ட் பேமெண்ட்
 தகவல்கள் கசிந்தன
- பாதிப்பு ஏற்படுமா?

வங்கி மற்றும் நிதி நிறுவன வாடிக்கையாளர் கார்டுகள் மூலம் பேமெண்ட் குறித்த விவரங்கள் கசிந்துள்ளன என்று சைபர் பாதுகாப்பு குறித்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

இதற்கு முன்பும் இதேபோன்று பயனாளர்களின் தகவல்கள் கசிந்துள்ளன என்றாலும், அப்போது ரகசியத்தன்மை வாய்ந்த முக்கியத் தகவல்கள் பாதிக்கப்படவில்லை

இந்த முறை பயனாளர்களின் எஸ்எஸ்என், கார்டு விவரங்கள் மற்றும் சிவிவி எண் போன்ற முக்கிய தகவல்கள் கசிந்துள்ளன என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்

இதுகுறித்து சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், எஸ்பிஐ வங்கி, பிசர்வ் சொல்யூஷன்ஸ் எல்எல்சி, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற முன்னணி வங்கி அமைப்புகளின் தரவுகள் கசிந்துள்ளன

சுமார், விசா பேமெண்ட் சேவை கொண்ட 5.08 லட்சம் டெபிட் கார்டுகளின் விவரங்கள் மற்றும் மாஸ்டர்கார்டு சேவை கொண்ட 4.14 லட்சம் கார்டுகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன’’ என்று தெரிவித்தனர்

சாஃட்பேங்க், பேங்க் ஆஃப்
சிங்கப்பூர், வேர்ல்டு பேங்க் போன்ற அமைப்புகளின் அலுவலக இமெயில் முகவரிகளும் கூட இந்த தாக்குதலில் இருந்து தப்பவில்லை

சைபர் பாதுகாப்பை பலப்படுத்த எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதையெல்லாம் முறியடிக்கும் வகையில் புதிய உத்திகளுடன் அவர்கள் களமிறங்குவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்ட இன்றைய சூழலில், சைபர் தாக்குதல்களை கடந்து நாம் ஒதுங்கி நின்றுவிட முடியாது

அந்த வகையில், பெரிய அளவுக்கு ஆஃபர்களை காட்டி, நம்மை மதி
மயக்கச் செய்யும் மோசடியான இணையதளங்களை பார்வையிடுவதை நாம் தவிர்க்க வேண்டும்

சைபர் பாதுகாப்பு இல்லை என்ற சந்தேகம் கொண்ட தளங்களில் நாம் பரிவர்த்தனைகளை
 மேற்கொள்ளக் கூடாது

இன்னும் பார்க்க