உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும்
சேமிப்பு திட்டங்கள்.!

முதலீடுகளை சாதுர்யமாக மேற்கொள்ளும்போது உங்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது

பணத்தை பெருக்குவதற்கு ஓராண்டு முதல் 5 ஆண்டுகளுக்குள் பலன் தரக் கூடிய குறுகிய கால முதலீடுகளையும் மேற்கொள்ளலாம்

லிக்யூட் ஃபண்ட்ஸ்: பணத்தை லிக்யூட் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம். இது குறைந்தபட்சம் 91 நாட்கள் முதிர்வு காலத்தை கொண்டது. 4 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையில் லாபம் கிடைக்கும்

குறுகிய கால ஃபண்ட் திட்டங்கள் : இந்த திட்டமானது 3 முதல் 6 மாதங்களைக் கொண்டதாகும். வங்கியில் நீங்கள் மேற்கொள்ளும் பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு நிகராக அல்லது அதற்கு மேல் உங்களுக்கு லாபம் கிடைக்கும்

ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்ஸ்: இது ஈக்யூடி மற்றும் ஃபியூச்சர்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தும் திட்டமாகும். ஆண்டு அடிப்படையில் தோராயமாக 8 முதல் சதவீத லாபம் கிடைக்கும்

மணி மார்க்கெட் ஃபண்ட்ஸ் : மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலேயே மிகவும் குறைவான அபாயங்களைக் கொண்டது இந்த திட்டம் ஒன்றுதான். 3 மாதம் முதல் ஓராண்டு முதிர்வு காலம் ஆகும்

அஞ்சல் நிலைய டெர்ம் டெபாசிட்: எந்தவொரு அஞ்சல் நிலையத்திலும் ஓராண்டுக்கு இந்தத் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு நிகரான லாபத்திற்கு உத்தரவாதம் உண்டு

நியூ ஏஜ் சேவிங்ஸ் அக்கவுண்ட் : வழக்கமான சேமிப்புத் திட்டங்களைக் காட்டிலும், மிகக் கூடுதலான வட்டியை தருவதாக நியூ ஏஜ் சேவிங்ஸ் திட்டங்கள் அமைந்துள்ளன

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com