Home /virudhunagar /

விருதுநகரில் கட்டடங்கள், நிலப்பயன் மாற்றத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

விருதுநகரில் கட்டடங்கள், நிலப்பயன் மாற்றத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

மாதிரி படம்

மாதிரி படம்

விருதுநகர் மாவட்டத்தில் கட்டிடங்கள், நிலப்பயன் மாற்றத்துக்கு இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர்கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
    விருதுநகர் மாவட்டத்தில் கட்டிடங்கள், நிலப்பயன் மாற்றத்துக்கு இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை கடந்த 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் மேலும் பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், கட்டிடங்கள், நிலப்பயன் மாற்றத்துக்கு இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரச சார்பில் அறிவிப்புகளும் வெளியாகி உள்ளன.

    தமிழகத்தில் பொதுமக்கள் எளிதாகவும் மற்றும் விரைவாகவும் மனைப்பிரிவு அனுமதி பெறும் வகையில் கடந்த ஜூன் மாதம் ஒற்றை சாளர முறையில் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.

    Also Read : பாளையக்காரர்களை மிரட்டும் பாவாலி பட்டயம்..

    இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் ஏராளமானவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெற்று வருகின்றனர். அதேபோல் தற்போது கட்டிடங்கள் முழுமைத்திட்ட நிலப்பயன் மாற்றம் மற்றும் விரிவு அபிவிருத்தி திட்ட மாற்றம் தொடர்பான விண்ணப்பங்களை ஒற்றை சாளர முறையில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    எனவே பொதுமக்கள் சரிபார்ப்பு படிவத்தின்படி, ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பம் செய்து எளிதாக ஒப்புதல் பெறலாம் என கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் போது, எளிதாகவும் விரைவாகவும் இதன் பயன்களை பெற முடியும் என்று மக்கள் நம்புகின்றனர். பொதுமக்களுக்கு அலைச்சலும், வீண் செலவும் மிச்சம் என்று கேட்டுள்ளனர்.

     
    Published by:Vijay R
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி