ஹோம் /விருதுநகர் /

சமத்துவபுரம் வீடுகளுக்கு விண்ணப்பிக்கலாம் - விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

சமத்துவபுரம் வீடுகளுக்கு விண்ணப்பிக்கலாம் - விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

சமத்துவபுரம் வீடுகள்

சமத்துவபுரம் வீடுகள்

Samathuvapuram House | விருதுநகர் மாவட்டத்தில், சமத்துவபுரம் வீடுகள் காலியாக இருக்கின்றன. இந்த வீடுகளுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டத்தில், சமத்துவபுரம் வீடுகள் காலியாக இருக்கின்றன. இந்த வீடுகளுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

விருதுநகர் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் அருணாச்சலபுரம் கிராம ஊராட்சிக்குட்பட்டது சின்ன செட்டிகுறிச்சி உட்கடை கிராமம். இங்கு சமத்துவபுரம் இருக்கிறது. இந்த சமத்துவபுரத்தில் 100 வீடுகள் உள்ளன. இவற்றில் 79 வீடுகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு குடியிருந்து வருகின்றனர்.

Must Read : மேட்டுப்பாளையம் ரயில் நிலையம், தூரி பாலத்தில் ஷூட்டிங் நடத்தி ஹிட்டான படங்களின் லிஸ்ட்!

மீதமுள்ள 21 வீடுகளுக்கு பயனாளிகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருப்பதால் தற்போது 21 வீடுகளுக்கு தகுதியுள்ள பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில், எஸ்.சி./எஸ்.டி. பிரிவில் 2 பயனாளிகளும், எம்.பி.சி. பிரிவில் 6 பயனாளிகளும், பி.சி. பிரிவில் 3 பயனாளிகளும் மற்றும் ஓ.சி. பிரிவில் 10 பயனாளிகளும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சின்னசெட்டிகுறிச்சி உட்கடை கிராமத்திற்கு 3 கி.மீ. சுற்றளவில் வசித்து வரும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள வீடற்ற தகுதியான பயனாளிகள் அலுவலக வேலை நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் சென்று விருப்ப மனுவினை தேவையான ஆவணங்களுடன் வரும் 21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Periyar samathuvapuram, Virudhunagar