ஹோம் /Virudhunagar /

நூல் விலை உயர்வு.. பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

நூல் விலை உயர்வு.. பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

நூல்

நூல் விலை உயர்வு-பேண்டேஜ் மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு

Virudhunagar District: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நாளுக்கு நாள் நூல் விலை அதிகரித்து வருவதை கண்டித்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த பேண்டேஜ் மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் நாளை ( 25 ஆம் தேதி) முதல் 31ஆம் தேதி வரை 7 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  சந்தையில் அதிகரித்து வரும் நூல் விலை உயர்வை கண்டித்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பேண்டேஜ் மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் வரும் 25 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஏழு தினங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மேலும் அதேபோல் விசைத்தறி கூடங்கள், சைசிங் பேக்டரிகள் மற்றும் பேண்டேஜ் நிறுவன தொழிற்சாலைகள் அனைத்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து நம்மிடம் பேசிய மருத்துவ துணி ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ஆறுமுகப் பெருமாள் கூறியதாவது, சந்தையில் நாளைக்கு நாள் நூல் விலை உயர்வால் மருத்துவ பேண்டேஜ் துணி உற்பத்தி தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நூல் விலை உயர்வை கண்டித்து ஒரு வார வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் இத்தொழிலை நம்பி உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக நூல் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

  செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்

  Published by:Arun
  First published:

  Tags: Virudhunagar