முகப்பு /விருதுநகர் /

விருதுநகர் கூரைக்குண்டு ஊராட்சியில் மகளிர் தின விழா.. ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு..

விருதுநகர் கூரைக்குண்டு ஊராட்சியில் மகளிர் தின விழா.. ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு..

X
அல்லம்பட்டியில்

அல்லம்பட்டியில் மகளிர் தின விழா.... 

Virudhunagar News | விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் கூரைக்குண்டு பஞ்சாயத்து சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் கூரைக்குண்டு ஊராட்சியில் மகளிர் தின விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம், அல்லம்பட்டி பகுதியில் மாத்து நாயக்கன்பட்டி சாலையில் உள்ள குமரன் மகாலில் கூரைக்குண்டு முதல்நிலை ஊராட்சி மன்றம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கூரைக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி, விருதுநகர் ஜேசிஐ அமைப்பினர், விருதுநகர் கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் ராஜ சுலோச்சனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நிகழ்ச்சியில் தலைமை வகித்து பேசிய காவல் ஆய்வாளர் ராஜ சுலோச்சனா பெண் கல்வியின் அவசியத்தை பற்றி எடுத்துரைத்தார். இவ்விழாவில் அல்லம்பட்டி பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட நிலையில், விருதுநகர் ஜேசிஐ அமைப்பு சார்பில் சிறந்த ஊராட்சி மன்ற தலைவருக்கான விருது கூரைக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் செல்விக்கு வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Virudhunagar