முகப்பு /விருதுநகர் /

விருதுநகரில் மகளிர் தின விழிப்புணர்வு ஊர்வலம் - பதாகைகளை ஏந்தி வந்த கல்லூரி மாணவிகள்...

விருதுநகரில் மகளிர் தின விழிப்புணர்வு ஊர்வலம் - பதாகைகளை ஏந்தி வந்த கல்லூரி மாணவிகள்...

X
மகளிர்

மகளிர் தின ஊர்வலம் 

Virudhunagar News | பெண்கள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி மாணவிகள் ஊர்வலம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

உலக மகளிர் தினத்தையொட்டி விருதுநகர் ரோட்டரி கிளப் மற்றும் அருப்புக்கோட்டை நோபில் பெண்கள் கல்லூரி சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஏராளமான கல்லூரி மாணவிகள் பங்கு பெற்றனர்.

சத்துணவு ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் இந்த ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவிகள் பெண்கள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

காலை பத்து மணியளவில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் மார்க்கெட், தெப்பக்குளம், நகராட்சி அலுவலகம், எம்.ஜி.ஆர் சிலை வழியாக வந்து விருதுநகர் ரோட்டரி கிளப் அலுவலகத்தில் முடிவு பெற்றது. இறுதியாக அங்கு நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பஜார் காவல் நிலைய ஆய்வாளர் சித்ரகலா மாணவிகளிடையே பேசினார்.

First published:

Tags: Local News, Virudhunagar