முகப்பு /விருதுநகர் /

விருதுநகர் - திண்டுக்கல் இடையே ரயில்கள் இயக்கப்படுமா? - எதிர்பார்ப்பில் பயணிகள்..

விருதுநகர் - திண்டுக்கல் இடையே ரயில்கள் இயக்கப்படுமா? - எதிர்பார்ப்பில் பயணிகள்..

X
விருதுநகர்

விருதுநகர் ரயில் நிலையம்

Southern Railways : ரயில் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு விருதுநகர் - திண்டுக்கல் இடையே நேரடி இரயில் இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் - திண்டுக்கல் இடையே திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி போன்ற பகுதிகளில் இருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அதில் எப்போதும் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுவதால், விருதுநகர் திண்டுக்கல் இடையே தனியே ரயில் சேவை வேண்டும் என்ற ஒரு கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இதன் மூலம் விருதுநகர், மதுரை, திண்டுக்கல் இந்த 3 மாவட்ட மக்களுக்கு பயன்படும் வகையில் மொத்தம் 113 கி.மீட்டர் தூரம் கொண்ட விருதுநகர் - திண்டுக்கல் இடையே நேரடி ரயில் சேவை வேண்டும் என மூன்று மாவட்ட மக்களும் தென்னக ரயில்வேக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

விருதுநகர் ரயில் நிலையம்

ஏற்கனவே விருதுநகர் திண்டுக்கல் இடையே இயக்கப்படும் மற்ற ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில், இதில் ரயில் இயக்கப்படும் பட்சத்தில், கூட்ட நெரிசலை குறைக்க முடியும் என்று கூறப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும், இந்த வழித்தடத்தில் தனியே ரயில் சேவை வழங்கும் பட்சத்தில் அது விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடை ரோடு, திண்டுக்கல் பகுதியில் உள்ள மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என அவர்கள் தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    First published:

    Tags: Local News, Southern railway, Virudhunagar