Home /virudhunagar /

உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் சலவைத் தொழிலாளர்கள் - மாவட்ட நிர்வாகம் கருணை காட்டுமா?

உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் சலவைத் தொழிலாளர்கள் - மாவட்ட நிர்வாகம் கருணை காட்டுமா?

உதவியை

உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் சலவைத் தொழிலாளர்கள்-மாவட்ட நிர்வாகம் கருணை க

மாவட்ட நிர்வாகம் சார்பில் சலவைத் தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி உதவித்தொகை என பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்துள்ளன.

    நவீன சலவை இயந்திரங்கள் வருகையால் சலவைத் தொழில் முற்றிலுமாக முடங்கி வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட சலவைத் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இது குறித்த செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

    முன்னொரு காலத்தில் பெரும்பாலான வீடுகளில் பொதுமக்கள் தங்களது ஆடைகளை சலவை தொழிலாளர்கள் குறித்து இஸ்திரி மற்றும் சலவைக்கு போடும் வழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் இத்தொழிலை நம்பியுள்ள விருதுநகர் அல்லம்பட்டி மற்றும் பர்மா காலனி 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

    தற்போது நாகரீக பரிமாண வளர்ச்சி காரணமாக வீட்டு வீட்டிற்கு வாஷிங் மெஷின் வருகையால் சலவைக்குப் போடும் வழக்கம் தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருவதால் இத்தொழிலை நம்பி உள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சலவைத் தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி உதவித்தொகை என பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்துள்ளன. தற்போது இது போன்ற எந்தவித சலுகைகளும் வழங்கப்படாததால் பெரும் கவலையில் இருந்து வருகின்றனர்.சலவைத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகைகளும் கிடைக்காததால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    இதுகுறித்து நம்மிடம் பேசிய சலவைத் தொழிலாளி சுப்புலட்சுமி கூறியதாவது, சலவைத் தொழிலில் சிறு வயது முதல் தற்போது 75 வயதுக்கும் மேலாக சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். சலவைத் தொழில் நாளுக்கு நாள் மேலும் எல்லாம் நிறைவடைந்து வருகிறது இதனால் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சலவைத் தொழிலாளர்களுக்கு வழங்க கூடிய நலத்திட்ட உதவிகள் இஸ்திரி பெட்டி உதவித்தொகை போன்ற எவ்வித சலுகைகளும் இதுவரை கிடைக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக சலவைத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி