ஹோம் /விருதுநகர் /

இருக்கன்குடி அணையில் சுற்றுலா பயணிகளை கவர படகு சவாரி வசதி ஏற்படுத்தப்படுமா? - விருதுநகர்வாசிகளின் கோரிக்கை இதுவே..

இருக்கன்குடி அணையில் சுற்றுலா பயணிகளை கவர படகு சவாரி வசதி ஏற்படுத்தப்படுமா? - விருதுநகர்வாசிகளின் கோரிக்கை இதுவே..

விருதுநகர்

விருதுநகர் இருக்கன்குடி அணை

Virudhunagar Irukankudi Dam | விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி கிராமத்தில் வைப்பாரு அர்ஜூனா நதி சேரும் இடத்தில் விவசாய பயன்பாட்டிற்காக 2004 ம் ஆண்டு 22 அடி கொள்ளவில் அணை கட்டி முடிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி அணையை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி கிராமத்தில் வைப்பாரு அர்ஜூனா நதி சேரும் இடத்தில் விவசாய பயன்பாட்டிற்காக 2004 ம் ஆண்டு 22 அடி கொள்ளவில் அணை கட்டி முடிக்கப்பட்டது. சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு இந்த அனை தான் பிரதான நீராதாரம். அது மட்டுமல்ல தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம், விளாத்திகுளம் பகுதிகளுக்கும் இந்த இந்த அனை தான் முக்கிய நீராதாரமாக உள்ளது.

படகு சவாரி - பூங்கா:

இந்த அணையை கட்டும் போதே இங்கு பூங்கா அமைத்து படகு சாவாரி வசதிகளையும் ஏற்படுத்தி தருவர் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அணை மட்டும் கட்டி முடிக்கப்பட்டு அதோடு சில மரக்கன்றுகள் நட்டதோடு பணி முடிக்கப்பட்டது.

மேலும் படிக்க:  திருமண தடை நீங்க விருதுநகரில் வழிபடவேண்டிய முக்கிய கோவில்

இருக்கன்குடி மாரியம்மன் கோவில்:

இருக்கன்குடியில் வரலாற்று புகழ் பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். அவர்கள் இந்த அணைக்கும் வந்து செல்வதுண்டு, இப்படிப்பட்ட சூழலில் இங்கு பூங்காவும், படகு சவாரி வசதிகளும் இருந்திருந்தால் இந்த பகுதி சிறந்த சுற்றுலா தலமாக உருவெடுத்து இருக்கும் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இருக்கன்குடி அணை

அணை ஷட்டர்கள் பலவீனம்:

அணை தற்போது போதிய பராமரிப்பு இன்றி கருவேல மரங்கள் நிறைந்து முட்புதர் காணப்படுகிறது. மொத்தம் 21 ஷெட்டர்களை கொண்ட இந்த அணையில் ஷட்டர்கள் பலவீனமாக உள்ளன. இதனால் நீர்க்கசிவு ஏற்பட்டு அனையில் போதுமான அளவு நீரை தேக்க முடியாத நிலை காணப்படுகிறது.

மேலும் படிக்க: விஜய் படமே இங்கதான் எடுத்திருக்காங்க பாருங்களேன்..! இந்த கோயில்ல இத்தனை படங்கள ஷூட் பண்ணிருக்காங்களா?

மேலும் அணையின் பாதுகாப்பு தடுப்பு சுவர்களை புதுப்பிக்க முடிவு செய்து, பழைய தடுப்பு சுவர்கள் இடிக்கப்பட்டுள்ளது. இடிக்கப்பட்டதோடு சரி அதன் பின்னர் எந்த வித முன்னேற்றமும் அதில் இல்லை. இதனால் தடுப்பு சுவர்கள் இடிக்கப்பட்டு, பார்வையாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இதற்கு அதிகாரிகளின் மெத்தன போக்கு தான் முக்கிய காரணம் என்கின்றனர் உள்ளூர் மக்கள்.

இருக்கன்குடி அணை

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் அணைக்கு போதிய பாதுகாப்பு வசதியும் உறுதி செய்யப்படவில்லை‌. இதனால் மது அருந்துதல், போதைப்பொருள் உபயோகம் போன்ற சமூக விரோத செயல்களும் சுதந்திரமாக அரங்கேறி வருகின்றன. இனிமேலாவது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அணையை மறுசீரமைப்பு செய்து சுற்றுலா வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar