முகப்பு /விருதுநகர் /

“ரோடு எப்ப தான் போடுவீங்க..” தவிக்கும் விருதுநகர் நகர் மக்கள்..

“ரோடு எப்ப தான் போடுவீங்க..” தவிக்கும் விருதுநகர் நகர் மக்கள்..

X
சேதமான

சேதமான சாலைகள்

Virudhunagar District News | விருதுநகர் மாவட்டம் பாத்திமா நகர் பகுதியில் தோண்டப்பட்ட சாலைகள் விரைவில் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் பாத்திமா நகர் பகுதியில் தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாமல் இருப்பதால், அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

விருதுநகர் ஆத்துபாலம் அருகே அமைந்துள்ளது பாத்திமா நகர். இங்கு 1000க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக சாத்தூர் சாலையில் இருந்து ஆத்துப்பாலம் பஸ் ஸடாப்பை இணைக்கும் வகையில் பாத்திமா நகர் வழியாக செல்லும் நிலையில், பெரும்பாலான மக்கள் இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

சேதமடைந்து கிடக்கும் சாலை

பாத்திமா நகர் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக சாலையானது தோண்டப்பட்டது. குடிநீர் பணிகள் முடிவடைந்த பின்னர் சாலை சீரமைக்கப்படாமல் இருப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதையும் படிங்க : சதுரகிரி மலையேற ரெடியா? வந்துவிட்டது வனத்துறை அறிவிப்பு

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு கேட்டபோது, “பாத்திமா நகர் பகுதியில் இன்னும் குடிநீர் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முழுமையாக முடிந்த பின்னர் சாலை சீரமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து பாத்திமா நகர் பொதுமக்கள் பேசும்போது, “பணிகள் முடிந்து நீண்ட நாள் ஆகியும் சாலை சீரமைக்கப்படாமல் இருப்பதால் கடும் சிரமமாக உள்ளது. பொதுமக்களின் நலனை கருத்தில் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்” என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Virudhunagar