Home /virudhunagar /

‘தென் கைலாயம்’ சதுரகிரி மலை பற்றி தெரியுமா?

‘தென் கைலாயம்’ சதுரகிரி மலை பற்றி தெரியுமா?

சித்தர்கள்

சித்தர்கள் தவம் செய்யும் சதுரகிரி மலை..

Sathuragiri Sundara mahalingam Temple | விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இயற்கை வனப்புமிக்க இந்த சதுரகிரி மலையில் பல அபூர்வ மூலிகைகள் காணப்படுகின்றன.மேலும் 18 சித்தர்கள் வந்து தவம் செய்த இடமாகவும், இன்றும் சித்தர்கள் இங்கு தவம் செய்து வருவதாகவும் நம்பப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar
    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலை மிகவும் புகழ்பெற்ற ஆன்மிக தலமாக விளங்குகிறது.

    இந்த பகுதியை சுற்றியுள்ள மலைகளின் அமைப்பு சதுர வடிவில் காணப்படுவதால் சதுரகிரி என பெயர் பெற்றது. இந்த மலைக்கு மதுரை மாவட்டம் சாப்டூர் வாழைதோப்பு பகுதியில் இருந்தும்,தேனி மாவட்டம் வருஷநாடு பகுதியில் இருந்தும், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் இருந்தும் மலைப்பாதைகள் உள்ளன.இதில் வத்திராயிருப்பு பாதை சற்றே சுலபம் என்பதால் பெரும்பாலான பயணிகள் இதைதான் பயன்படுத்தி வருகின்றனர்.

    தற்போது மலையேற ஏதுவாக முதல் இரண்டு கிலோ மீட்டருக்கு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்னர் கரடுமுரடான பாறைகளையும், பள்ளத்தாக்குகளையும், நீரோடைகளையும் கடந்து சென்று தான் சிவபெருமானை தரிசிக்க இயலும். ஆயினும் சிரமம் பார்க்காமல் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    சதுரகிரி மலை


    சதுரகிரி மலையின் சிறப்பு:

    இயற்கை வனப்புமிக்க இந்த சதுரகிரி மலையில் பல அபூர்வ மூலிகைகள் காணப்படுகின்றன.மேலும் 18 சித்தர்கள் வந்து தவம் செய்த இடமாகவும், இன்றும் சித்தர்கள் இங்கு தவம் செய்து வருவதாகவும் நம்பப்படுகிறது.

    சதுரகிரி மலை


    மலைக்கு மேலே சந்தன மகாலிங்கம், சுந்தர மகாலிங்கம், இரட்டை லிங்கம், காட்டு லிங்கம், மகாலிங்கம் என 5 சிவன் கோயில்கள் காணப்படுகின்றன. இவற்றை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஆடி அமாவாசை சதுரகிரி மலையேற உகந்த தினமாக கருதப்படுகிறது. வருடந்தோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் சிவராத்திரி தினத்தன்று இம்மலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அதிகமான மக்கள் மலையேறிச் சென்று வழிபட்டு வருகின்றனர்.

    சதுரகிரி மலை


    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    கோவில் தல வரலாறு :

    முதலில் மலைவாழ் மக்களான பளியர் இன மக்களால் பராமரிக்கப்பட்டு, பின்னர் திருமலை நாயக்கர் காலத்தில் சாப்டூர் ஜமீனால் மலைக்கு மேலே சுந்தர மகாலிங்கம் கோவில் கட்டப்பட்டது.தற்போது இப்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    எப்படி செல்வது?

    வெளியூரில் இருந்து வருபவர்கள் மதுரை வந்தடைந்து அங்கிருந்து ஶ்ரீவில்லிபுத்தூர் வந்து வத்திராயிருப்பு தானிப்பாறை வந்தடைந்து அங்கிருந்து மலையேற துவங்கலாம். மாதத்தில் அமாவாசை, பௌர்ணமி,பிரதோஷம் என எட்டு நாட்கள் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே கோயிலுக்கு வருபவர்கள் இந்த 8 நாட்களை கருத்தில் கொண்டு வந்தால் மலையேற்ற அனுபவத்தையும், ஆன்மிகத்தையும் ஒருங்கே உணரலாம்.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    Sathuragiri sundara mahalingam temple
    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்


    செய்தியாளர் : அழகேஸ்வரன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Hindu Temple, Local News, Virudhunagar

    அடுத்த செய்தி