முகப்பு /விருதுநகர் /

எச்சரிக்கை : விருதுநகரில் பகல் நேரத்தில் அதிகம் வெளியில் போகாதீங்க!

எச்சரிக்கை : விருதுநகரில் பகல் நேரத்தில் அதிகம் வெளியில் போகாதீங்க!

X
மாதிரி

மாதிரி படம்

Weather News : விருதுநகரில் கோடை வெயிலின் தாக்கத்தால் அனல் காற்று வீசி வருவதால் மக்கள் வெளியில் செல்ல முடியாத சுழல் ஏற்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Virudhunagar, India

தமிழகத்தில் இந்த முறை கோடைகாலம் வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கி விட்ட சூழலில், விருதுநகரில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது‌. மதுரை, கோவை போன்ற நகரங்களில் வெப்பநிலை சதம் அடித்து வரும் நிலையில் விருதுநகரிலும் கடந்த ஏப்ரல் 13ம் தேதி தொடங்கி 3 நாட்களாக வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அத்தோடு சேர்த்து மதிய வேளையில் அனல் காற்று வீசி வருவதால் மக்கள் வெளியில் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வரை பகல் நேரத்தில் 100 டிகிரி பாரன் ஹீட் வெப்பநிலை இருந்து வரும் நிலையில், இனி வரும் நாட்களிலும் இதே வெப்பநிலை நீடிக்கும். மழையை பொருத்தவரை இதுவரை மழை ஏதும் பதிவாகாத சூழலில் இதேநிலை தான் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியில் செல்ல வேண்டாம் :

மேலும் தற்போது மதியம் 12 மணி முதல் மாலை 4 வரை அனல் காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மேற்சொன்ன நேரங்களில் வெளியில் கூடுமான வரை தவிர்த்து விடுவது நல்லது.

top videos
    First published:

    Tags: Local News, Virudhunagar, Weather News in Tamil