ஹோம் /விருதுநகர் /

விருதுநகரை பசுமையாக்க நீங்களும் கைகோர்க்கலாம்.. ஆலமரம் அமைப்பின் அசத்தும் மக்கள் பணி..

விருதுநகரை பசுமையாக்க நீங்களும் கைகோர்க்கலாம்.. ஆலமரம் அமைப்பின் அசத்தும் மக்கள் பணி..

விருதுநகர்

விருதுநகர்

Virudhunagar Aalamaram | விருதுநகர் மாவட்டம் முழுவதும் குறுங்காடுகள் அமைத்து இந்த ஊரை பசுமையாக்குவதே எங்கள் லட்சியம் என ஆலமரம் அமைப்பில் இணைந்து பணியாற்றும் தன்னார்வலர்கள் தெரிவித்தனர்..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

விருதுநகரை சேர்ந்த தன்னார்வ அமைப்பான ஆலமரம் அமைப்பினர் வாரம் வாரம் பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு அவற்றை மரமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் விருதுநகர் நகராட்சி பூங்கா தேர்வு செய்யப்பட்டு மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

இந்நிகழ்வில் விருதுநகர் நகராட்சி தலைவர் திரு.எஸ்.ஆர் மாதவன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

இதில் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை ஆர்வத்துடன் நட்டனர்.

மாணவர்கள் பங்களிப்பு:

இயற்கை பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் ஆலமரம் அமைப்பில் மாணவர்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் மாணவர்களையும் ஊக்கப்படுத்தி அவர்களையும் இதில் இனைத்து, மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க:  திருமண தடை நீங்க விருதுநகரில் வழிபடவேண்டிய முக்கிய கோவில்

ஆலமர அமைப்பை சேர்ந்த மாணவர்கள் கூறுகையில் தாங்கள் விடுமுறை நாட்களில் வீட்டில் நேரத்தை வீணாக்காமல் இது போன்ற பொது சேவைகள் செய்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் விருதுநகர் மாவட்டம் முழுவதும் குறுங்காடுகள் அமைத்து இந்த ஊரை பசுமையாக்குவதே எங்கள் லட்சியம் என தெரிவித்தனர். இந்த ஊரை பசுமையாக்க நாம் அனைவரும் சேர்ந்து முயற்சித்தால் மட்டுமே அது சாத்தியம். ஆகையால் அனைவரும் மரம் வளர்க்க முன்வர வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

ஆலமரம் அமைப்பில் தன்னார்வலராக இணைய விருப்பம் உள்ளவர்கள் 86100 58484 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பேசுங்கள்...   

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar