முகப்பு /விருதுநகர் /

விருதுநகரில் சமூக சேவையில் கலக்கி வரும் ஆலமரம் தன்னார்வ அமைப்பு!

விருதுநகரில் சமூக சேவையில் கலக்கி வரும் ஆலமரம் தன்னார்வ அமைப்பு!

X
மரம்

மரம் நடுதல், குருதி கொடை , உடல் தானம் ஒரே நேரத்தில் முப்பெரும் நிகழ்வு

Virudhunagar விருதுநகரை சேர்ந்த தன்னார்வ அமைப்பான ஆலமரம் அமைப்பினர் ஒரே நேரத்தில் மரம் நடுதல், இரத்த தானம், உடல் உறுப்பு தானம் என முப்பெரும் நிகழ்வை நடத்தியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

விருதுநகரை சேர்ந்த தன்னார்வ அமைப்பான ஆலமரம் அமைப்பினர் ஒரே நேரத்தில் மரம் நடுதல், இரத்த தானம், உடல் உறுப்பு தானம் என முப்பெரும் நிகழ்வை நடத்தியுள்ளனர்.

கடந்த ஜனவரி 29ம் தேதி விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசிய போது மரம் நடுதல், இரத்த தானம், உடல் உறுப்பு தானம் இந்த மூன்றும் தான் சிறந்த சமூக சேவை என்று ஆலமரம் அமைப்பை பாராட்டி பேசினார்.தொடர்ந்து இறப்பிற்கு பின் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்தோர்களுக்கும், இரத்த தானம் செய்தோர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கினார்.

இதனை தொடர்ந்து ஆலமரம் அமைப்பினர் புதிதாக கட்டப்பட்ட மருத்துவ கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். இது குறித்து பேசிய ஆலமரம் அமைப்பை சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் பேசுகையில் புவி வெப்பமடைதலில் இருந்து நம்மை பாதுகாக்க வார வாரம் மரக்கன்றுகளை நட்டு வருவதாகவும், இந்த வாரம் 100வது வாரமாக மரம் நட முடிவு செய்த போது அதோடு சேர்ந்து இரத்த தானம் மற்றும் உடல் தானம் வழங்கும் நிகழ்வையும் சேர்த்து முப்பெரும் நிகழ்வாக நடத்தி உள்ளதாகவும், இனி வரும் காலங்களில் இது போன்ற வேலைகளை தொடர்ந்து செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

First published:

Tags: Local News, Virudhunagar