விருதுநகரில் தற்போது சீசன் தொடங்கி விட்டதால் சூரிய காந்தி சாகுபடியை தொடங்கியுள்ளனர் விவசாயிகள். விருதுநகர் அருப்புக்கோட்டை சாலையோரங்களில் தற்போது சூரிய காந்தி பூக்கள் பூத்து குலுங்க தொடங்கி உள்ளன. பார்ப்பதற்கு அழகாக இருக்கும் காரணத்தால் வாகனங்களில் செல்வோர் இடைநின்று புகைப்படங்கள் எடுத்து செல்லும் அளவிற்கு, விவசாய நிலங்களை செல்ஃபி ஸ்பாட்களாக மாற்றியுள்ளன இந்த சூரிய காந்தி பூக்கள்.
மானாவாரி பயிர் :
சூரிய காந்தி ஒரு மானாவாரி பயிர். கடும் வறட்சியிலும் வளரக்கூடியது. பராமரிப்பு செலவு குறைவு என்பதாலே விருதுநகரின் காலநிலைக்கு ஏற்றவாறு உள்ளது. அதனால் பருத்தி, மிளகாய்க்கு அடுத்தபடியாக தற்போது விவசாயிகள் சூரிய காந்தியை நட தொடங்கி உள்ளனர்.
அருப்புக்கோட்டை பகுதியில் 17 ஆண்டுகளாக சூரிய காந்தி சாகுபடி செய்து வரும் தேவராஜ் கூறுகையில், சூரிய காந்திக்கு நாம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஓரளவுக்கு மழை பெய்து முளைத்து வந்தாலே போதும்.
பின்னர் அதுவே 90 நாட்களில் அறுவடைக் தயாராகிவிடும். பராமரிப்பு என்று பார்த்தால் கூட தொடக்கத்தில் களை எடுத்தால் போதுமானது. செடி நன்றாக வளர்ந்த பின்னர் செடியே களைச் செடிகளை வளர விடாது என்றார்.
இங்க் பேனா நினைவில் இருக்கா? சாத்தூர் நிப் தொழிற்சாலைகளின் கதை..!
பொதுவாக ஐப்பசி மாதம் தான் இதற்கு சீசன். அப்போது விதைத்தால் 90 நாட்களில் மகசூலுக்கு வந்துவிடும். பராமரிப்பு செலவு குறைவு, தண்ணீர் தேவை குறைவு என்பதாலே நல்ல மகசூல் பார்த்து இலாபம் ஈட்டலாம் என்றவர், பூச்சிகளின் தாக்குதல் இருந்தால் மட்டும் அப்போது மருந்து அடித்தால் போதுமானது என்றார். ஒரு ஏக்கர் நிலத்தில் குறைந்த காலத்தில் 30,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை லாபம் ஈட்ட முடியும் என்று தெரிவித்தார்.
மானாவாரி நிலங்களில் சூரிய காந்தி நன்றாக வளரும் என்பதால் சொந்தமாக கிணற்று பாசன வசதி இல்லாதோர் இதை சாகுபடி செய்து நல்ல இலாபம் பெற முடியும்.
செய்தியாளர்: அழகேஷ், விருதுநகர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Virudhunagar