ஹோம் /விருதுநகர் /

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்னு பேர் வச்சதுக்கு பதிலா.... வடிவேலு படம் குறித்து விருதுநகர் மக்களின் ஓபன் மூவி ரிவ்யூ..

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்னு பேர் வச்சதுக்கு பதிலா.... வடிவேலு படம் குறித்து விருதுநகர் மக்களின் ஓபன் மூவி ரிவ்யூ..

X
விருதுநகர்

விருதுநகர் ரசிகர்கள் கருத்து

Virudhunagar District News : வடிவேலு நடிப்பில் வெளிவந்துள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பற்றி விருதுநகர் மக்களின் கருத்தை தெரிந்துகொள்வோம்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

நடிகர் வடிவேலு நடிப்பில் உருவான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

வடிவேலு ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் காமெடியனாக கொடி கட்டிப் பறந்தார். கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து காணாமல் போன அவர் பட வாய்ப்புகள் ஏதும் இன்றி இருந்தார்.

நடிக்கவில்லை என்றாலும் அவரின் காமெடி டயலாக்குகள் இன்றும் பேசப்பட்டு வந்த நிலையில், ரசிகர்களும் வடிவேலு எப்போது மீண்டு வருவார் என எதிர்பார்த்திருந்தனர். இடையில் எலி, தெனாலிராமன் போன்ற படங்கள் வந்திருந்தாலும் அவை பெரிதாக போகவில்லை.

இதையும் படிங்க : சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களை அனுமதிக்கும் நேரம் குறைப்பு - முழுவிவரம் இதோ...

இந்நிலையில் தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் பற்றிய அறிவிப்பு வந்ததும் ரசிகர்கள் குஷியாயினர். நாய் சேகர் என்பது வடிவேலுவின் முக்கிய காமெடி கதாபாத்திரத்தில் ஒன்று. அதனாலே இந்தப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

இந்நிலையில் காலையில் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.சிலர் படம் அருமையாக உள்ளதாகவும், வேறு சிலர் படம் ஒரு முறை தான் பார்க்கும் அளவுக்கு உள்ளது என்றும் கருத்து தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இப்படி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள நாம் சேகர் ரிட்டர்ன்ஸ் வடிவேலு அவர்களுக்கு ரிட்டர்ன்ஸ் கொடுக்குமா இல்லையா என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

First published:

Tags: Local News, Virudhunagar