மாவட்ட தலைநகரான விருதுநகரின் அல்லம்பட்டி, ஆத்துப்பாலம் , சிவகாமிபுரம் என எந்த பகுதிக்கு சென்றாலும் அங்கு ஓர் குப்பை குவியலை காண முடியும். குறிப்பாக வாடியான் கேட் சாலையில் ரயில் பாதைகளுக்கு இணையாக குப்பை குவியலும் நீண்டு கொண்டே செல்வது நீண்ட காலமாக இருந்து வருகிறது.
முன்பெல்லாம் தெருவுக்கு தெரு குப்பை தொட்டிகள் இருக்கும் ஆனால் தற்போது குப்பை தொட்டி இருக்கும் இடத்தில் குப்பைகள் மட்டுமே இருக்கின்றன.
குப்பை தொட்டிகள் எங்கு சென்றன என்ற கோணத்தில் விசாரித்த போது, நகராட்சி சுகாதார ஆய்வாளர் மக்கள் குப்பை தொட்டிகளில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து போடாமல் ஒன்றாக கலந்து போடுவதால், பின்பு அதை தரம் பிரிக்க அதிக செலவாகிறது அதனால் தான் அதிலுள்ள சிக்கலை கருத்தில் கொண்டு குப்பை தொட்டிகளை நீக்கி விட்டு தாங்களே தூய்மை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்து வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க : திறந்த வெளி குப்பைகளால் கேள்விக்குள்ளாகி வரும் விருதுநகரின் சுகாதாரம்
மேலும் அவர் ஆனாலும் மக்கள் ஒரு சில இடங்களில் திறந்த வெளியில் குப்பைகளை கொட்டி வருவதாகவும் அதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
சுகாதார ஆய்வாளர் விளக்கம் தந்துள்ள நிலையில், அனைத்து பகுதிகளுக்கும் வந்து முறையாக குப்பைகளை சேகரிப்பதிலை அதனால் தான் திறந்த வெளியில் குப்பைகளை கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் பொதுமக்கள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த விவகாரத்தில் எது எப்படியோ திறந்த வெளி குப்பைகளால் நகரின் தூய்மை அழிந்து வருகிறது என்பது மட்டும் உண்மை. இதை தடுத்து ஊரை மீட்டெடுப்பது மக்கள் மற்றும் அரசின் கூட்டு முயற்சியில் மட்டுமே உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar