விருதுநகர் கே.வி.எஸ் பள்ளி மைதானத்தில் புத்தக திருவிழா கோலாகலமாக துவங்கியுள்ளது. நிகழ்வின் முதல் நாளான நேற்று அமைச்சர்கள் கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் சங்கத்தினர் இணைந்து புத்தக திருவிழா ஒன்றை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
அதன்படி புத்தக திருவிழாவை நவம்பர் 17ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடத்த திட்டமிட்டு, புத்தக திருவிழாவிற்கு ஶ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் வசிக்கும் அரிய வகை உயிரினமான சாம்பல் நிற அணிலை லோகோவாக தேர்வு செய்து அதற்கு 'விரு' என்று பெயரிட்டு இருந்தனர்.
இதையும் படிங்க : வீழ்ச்சியடைந்த கொய்யா விலை.. வேதனையில் மரத்தை எரிக்கும் விருதுநகர் விவசாயிகள்..!
இந்நிலையில், நேற்று (நவம்பர் 17) அன்று மாலை 5 மணியளவில், கேவிஎஸ் பள்ளி மைதானத்தில் புத்தக திருவிழாவை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தனர்.
உடன் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, விருதுநகர் நகர் மன்ற தலைவர், சிவகாசி மாநகராட்சி மேயர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காலை 11 மணி முதல் மாலை 9 மணி வரை நடை பெற உள்ள கண்காட்சியில் பார்வையாளர்களுக்கென நிறைய போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளன.
இதுகுறித்து புத்தக கண்காட்சியில் அரங்கு வைத்துள்ள புத்தக விற்பனையாளர் கார்த்திக் பேசுகையில், “புத்தக கண்காட்சியில் வரலாறு, ஆன்மிகம், அறிவியல் சம்பந்தமான பல புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பொன்னியின் செல்வன் புத்தகம் அதிகளவில் தேடப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மொத்தமாக 110 அரங்குகள் அமைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் இவ்வளவு பெரிய புத்தக திருவிழா நடைபெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar