முகப்பு /விருதுநகர் /

டெய்லர் முதல் தொழில்முனைவோர் வரை.. ஆரி ஒர்க்கில் அசத்தி வரும் விருதுநகர் பெண்மணி!

டெய்லர் முதல் தொழில்முனைவோர் வரை.. ஆரி ஒர்க்கில் அசத்தி வரும் விருதுநகர் பெண்மணி!

X
ஆரி

ஆரி ஒர்க்கில் அசத்தி வரும் விருதுநகர் பெண்

Virudhunagar District News : சாதரணமாக ஒரு துணி தைக்கும் டெய்லராக கடை வைத்திருந்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த செல்வி இன்று தன்னை போன்று ஏராளமான பெண்களுக்கு வேலை வழங்கும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

‘கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்’ என்பது பொன்மொழி. இதை மெய்ப்பிக்கும் வண்ணம் 12 ஆண்டுகளுக்கு முன்னர் சாதரணமாக ஒரு துணி தைக்கும் டெய்லராக கடை வைத்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த செல்வி என்ற பெண் இன்று தன்னை போன்று 10, 15 பெண்களுக்கு வேலை வழங்கும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

விருதுநகர் மேலரத வீதியில் சோபியா டெய்லரிங் மற்றும் சோபியா ஆரி ஒர்க் நடத்தி வரும் செல்வி, திருமணத்திற்கான புடவைகளில் ஆரி ஒர்க் செய்து கொடுத்து வருகிறார். 12 ஆண்டுகளுக்கு முன்பு தனி ஆளாக துணி தைய்க்க தொடங்கி பின்பு படிப்படியாக முன்னேறி இன்று தன்னை போன்ற பெண்களுக்கு தையல் பயிற்சி மற்றும் ஆரி ஒர்க் பயிற்சி கொடுத்து மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

விருதுநகரில் சோபியா ஆரி ஒர்க் என்றாலே பிரபலம், இவர், தற்போது ஆர்டர் அதிகம் வருவதால், ஆண்களையும் வேலைக்கு அமர்த்தி, ஆர்டர் டெலிவரி செய்து வருகிறார். தன்னிடம் வரும் பெண்களுக்கு தையல் பற்றி எதுவுமே தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தாலே போதும். நானே தையல் முதல் ஆரி வரை கற்று தந்து வேலையும் தருகிறேன் என்கிறார் செல்வி.

இதையும் படிங்க : காவல் நிலையமா.. குழந்தைகள் பூங்காவா? பொதுமக்களின் பாராட்டை பெற்றுவரும் சிவகாசி மாரனேரி போலீசார்!

தான் கற்றுக்கொண்ட தொழிலை மற்ற பெண்களும் கற்றுக்கொள்ள வேண்டும், இன்றைய சூழலில் பெண்கள் அனைவரும் எதாவது ஒரு சுயதொழில் கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் கூறிய செல்வி மீண்டும் தனது பணியில் ஈடுபட தொடங்கினார்.

First published:

Tags: Local News, Virudhunagar