Home /virudhunagar /

வயர் கட்டில் வாங்க ஆசையா? விருதுநகர் வாடியான் கேட்டில் தரமா செஞ்சு தராங்க...

வயர் கட்டில் வாங்க ஆசையா? விருதுநகர் வாடியான் கேட்டில் தரமா செஞ்சு தராங்க...

விருதுநகர்

விருதுநகர்

Virudhunagar District News | விருதுநகர் வாடியான் கேட்டில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில், பல வருடங்களாக தம்பதியர்  கட்டில் பின்னி வருவதை காண முடியும். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
நவநாகரீக உலகில் தினசரி நாம் நிறைய நபர்களை சந்தித்து வருகிறோம். ஒரு சிலரை நாம் தினசரி சந்தித்தாலும் கண்டும் காணாமல் சென்று விடுவோம் அந்த வகையில் விருதுநகர் வாடியான் கேட்டில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில், பல வருடங்களாக தம்பதியர்  கட்டில் பின்னி வருவதை காண முடியும். 

காலம் மாறி வரும் வேளையில் இந்த நார் கட்டில்களின் மவுசு பற்றி அறிய அவர்களிடம் சென்று பேசிய போது அவர்கள் தேனியிலிருந்து 35 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வந்து கட்டில் பின்னும் தொழில் செய்து வருவதாக தெரிவித்தனர்.

40 ஆண்டுகளாக கட்டில் பின்னி வரும் நிலையில் தற்போது நார் கட்டில் பின்ன 5,000 ரூபாயும், வயர் கட்டிலுக்கு 1,500 ரூபாயும் வாங்கி வருவதாக தெரிவித்தனர். இதில் இவர்களே வயர் மற்றும் நார் வாங்கி பின்னி தருகின்றனர். புதிய கட்டில்கள் மட்டும் இல்லாமல் வீட்டிலிருக்கும் பழைய கட்டில்கள், நாற்காலிகளுக்கும் வயர் போட்டு பின்னி தருகின்றனர்.

விருதுநகர்


இன்று எல்லோரும் பஞ்சு மெத்தைகளை நோக்கி செல்லும் வேளையில் பழமை விரும்புகிற ஒரு சிலரால் இன்றும் தங்கள் தொழில் நல்ல முறையில் இயங்கி வருவதாக தெரிவிக்கின்றனர் இந்த தம்பதியர்.

நார் கட்டில் பின்னும் தொழிலில் ஈடுபட்டுள்ள தம்பதி


உங்கள் இல்லங்களில் உள்ள வயர் கட்டில், நார் கட்டில்களை பின்ன விரும்பினால் 9843935114 என்ற எண்ணில் இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar

அடுத்த செய்தி